பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (25) நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
“நஷ்டத்தில் இயங்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் மீது அளவற்ற சுமையைத் திணித்து இன்று இலாபம் பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
தனியாருக்குத் தாரை வார்க்கும் அமைச்சர்
இப்போது இதற்கு பொருப்பான அமைச்சரே இதைத் தனியாருக்குத் தாரை வார்க்கிறோம் என்ற போர்வையில் இந்த நிறுவனத்தை, தனது நட்பு நிறுவனங்களோடு இணைந்து கொள்ளையடிக்கப் பார்க்கிறார்.
அதனால்தான் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தோம்.
இன்று நாம் இதைப் பற்றி கலந்துறையாடி, இந்த அரசுசொத்தை கையகப்படுத்தும் இந்த தன்னிச்சையான குறுகிய நோக்குடைய நபரின் முயற்சியை எப்படி முறியடிப்பது என்று முடிவு செய்வோம்.” என அசோக ரன்வல தெரிவித்துள்ளார்