தென்னிலங்கை மக்களை ஏமாற்றும் வகையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட அரசியல் நாடகம் ஒன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்ற ஒலிப்பதிவு ஒன்று கடந்த வாரம் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஒலிப்பதிவு வேண்டுமென்றே பதிவிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தற்போது கருத்து வெளியிடப்பட்டுள்ளன.
நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
பசில் ராஜபக்ஷ தன்னை நல்லவராக காட்டிக்கொள்வதற்கும், தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையாகவும் மேற்கொள்வதற்காக திட்டமிட்டு ஒலிப்பதிவு பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் மே தினம் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் குழு கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அந்த சந்திப்பின் போது பசில் ராஜபக்ஷ மற்றும் சமன் லால் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.