தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான யோகிபாபு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
அங்கு அவர் தாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் புதிய படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் யோகிபாபு திடீரென திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அவர் கோவிலில் உள்ள மூலவர், சுவாமி சண்முகர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
நடிகர் யோகி பாபுவை கண்டதும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். கோவில் சண்முக விலாஸ் மண்டபம் முதல் விருந்தினர் மாளிகை வரையிலும் நடிகர் யோகிபாபு செல்லும் வரை அவரை பின்தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். இடையில் கோவில் வளாகத்தில் நின்ற திருநங்கைகளிடத்திலும், யாசகம் பெறுபவர்களிடமும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.