விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கலான் படத்தில் நடித்து வரும் நடிகர் டேனியல் கால்டகிரோன் படப்பிடிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, உண்மையில் ஒரு தகுதியான இடைவெளி! இந்த அற்புதமான நாட்டை, இங்குள்ள அனைத்து அழகான முகங்களையும், எனது அற்புதமான சக ஊழியர்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக தலைசிறந்த இயக்குனரையும் விட்டு விடைபெற போகிறேன். ஒரு மாதத்தில் சந்திப்போம் என்று பதிவிட்டிருக்கிறார்.
இவரின் இந்த பதிவிற்கு இயக்குனர் பா.இரஞ்சித் பதிவிட்டிருப்பது, இந்த படத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை முற்றிலும் மதிக்கிறேன், விரைவில் சந்திப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.