நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் யாருடனாவது டேட்டிங் வைத்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு சமந்தா உங்களை விட என்னை அதிகம் நேசிக்கப்போவது யார் என்று கேட்டிருக்கிறார். இது தற்போது வேகமாக பரவி வருகிறது.