இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் திரைப்படம் ‘கேம் சேஞ்ஜர்’.
இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்ஜர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ‘கேம் சேஞ்ஜர்’ படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ராம்சரண் பிறந்தநாளானா இன்று ‘கேம் சேஞ்ஜர்’ படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கேம் சேஞ்ஜர்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.