விஜய், அஜித், ரஜினி, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் யோகி பாபு.
இவர் திருசெந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் விஜய், அஜித், ரஜினி, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தீவிர கடவுள் பக்தி கொண்ட யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு திருசெந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.