- முதல் முறையாக இப்போது தான் இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடரில் மோதின.
- 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
Afghanistan made a historic record in the first series against Pakistanபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் சடாப் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டுமே மோதிய போது பாகிஸ்தானிடம் ஒரு சில போட்டிகளில் ஆப்கானிஸ்தான் போராடி தோற்றது. அந்த நிலையில் முதல் முறையாக இப்போது தான் இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடரில் மோதின.
இத்தொடரில் அபாரமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக கடந்த ஆசிய கோப்பையில் இதே சார்ஜா மைதானத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தானை இம்முறை அதே மைதானத்தில் 2 போட்டிகளில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் பழி தீர்த்துள்ளது.