சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடம்நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கை மருத்துவ சபை பேராசிரியர் கார்லோ பொன்சேகாவின் யோசனையை தொடர்ந்துஇடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த விஞ்ஞான பீடம்நிர்மாணிக்கப்பட்டது என கோத்தப்பாய கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதேமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் அழுத்தம் கொடுத்து விஞ்ஞானப் பீடம் நிறுவப்பட்டது என சிலர் கருத்துதெரிவிக்கின்றனர்.
ஆனால்,எனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பேராசிரியர் கார்லோபொன்சேகாவே பதிலளிக்க வேண்டும்.
காரணம் விஞ்ஞானப் பீடத்தை நிறுவுமாறு ஏனையபேராசிரியர்களே கார்லோ பொன்சேகாவிற்கு அறிவுறுத்தியுள்ளனர் என கோத்தபாயகுறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை இருந்தது, தற்போதும் இருந்துவருகின்றது.
எனவே இந்த பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் புதிய விஞ்ஞானபீடத்தை நிர்மாணிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது என்றும்முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.