Loading...
பெரும்போகத்திற்கு தேவையான நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 20 பில்லியன் ரூபாயை செலவிடத் தயார் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பெரும்போகத்திற்கு தேவையான நெல்லை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
மேலும், குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசியை வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை தொடர முடியாவிட்டால், இந்த குடும்பங்களுக்கு மானியமாக நிதியுதவி வழங்க அரசு தயாராக உள்ளது என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Loading...