தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால்.
இவர் தற்போது ’லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் -ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வருமான ரீதியாக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷால் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு அழகான சாலை ஒரு அழகான பயணம் மற்றும் இலக்குக்கு வழிவகுக்கிறது. இதை என் வாழ்க்கையின் மறக்க முடியாத பயணமாக மற்றியதற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.