ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இவர்களுக்கு முறையான கல்வி அறிவு இல்லை என 43 படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கல்வியறிவு
“2019ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் எனும் மூவருக்கும் சரியானதொரு கல்வியறிவு இருக்கவில்லை. நான் அவர்களை குறைகூறவில்லை.
ஆனால் முறையான கல்வியறிவு இருக்கவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான் ஜனாதிபதியின் செயலாளர் தான் அனைத்து தீர்மானங்களையும் எடுத்தார்.
பொருளாதாரம்
அவ்வாறு இருக்க திறைசேரியின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இந்த மூவரும் தான் நாட்டின் பொருளாதாரத்தினை ஆட்டிப்படைத்தவர்கள்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இந்த மூவரும் அவர்கள் கூறுவதையே நம்பி இருந்தார்கள். அவர்கள் மூவரும் அன்று எடுத்த தீர்மானங்கள் நடவடிக்கைகள் இன்று சுமார் 55 இலட்ச மக்களை பாதிப்படைய வைத்துள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.