Loading...
பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பான விசாரணையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பிரசல்ஸ் மற்றும் அன்ட்வேர்ப் நகரங்களிலுள்ள வீடுகளில் நடத்தப்பட்ட முற்றுகைகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிஹாத் இயக்கமொன்றைச் சேர்ந்த மிக இளமையான தீவிரப் போக்குடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...
பெல்ஜியத்தில் 2016 முதல் 2018 வரை பல தாக்குதல் நடத்தப்பட்டன.
2016 மார்ச் மாதம் பிரசல்ஸ் நகரில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...