நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. நேற்று இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படத்தின் முதல் காட்சி தமிழ்நாடு முழுவதும் 8 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கு முன்பு வெளியான அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்திற்கும் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கும் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.