டுவிட்டரில் ரோகித்சர்மா என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
16-வது ஐ.பி.எல். திருவிழா நாளை தொடங்குகிறது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இதுவரை 15 சீசன்கள் நடைபெற்றுள்ளன. 16-வது ஐ.பி.எல். திருவிழா நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பு அனைத்து அணியின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒன்று. அதை போன்று இந்த ஐபிஎல் போட்டிக்கான கேப்டன்கள் கோப்பையுடன் உள்ள புகைப்படத்தை ஐபிஎல் வெளியிட்டது. அதில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது மும்பை அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து டுவிட்டரில் ரோகித்சர்மா என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.