Loading...
எதிர்காலத்தில் மேலும் ஒரு தொகுதி முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அரச வணிக பல்சார் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி 10 மில்லியன் முட்டைக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு குறைவடையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இதேவேளை தற்போதுள்ள உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்கள் தாய் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்யும் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதால், எதிர்காலத்தில் முட்டைக்கான தட்டுப்பாடு வலுவடையக்கூடும் என அகில இலங்க முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
Loading...