வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ’விடுதலை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
மதுரை மக்கள் சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. ‘விடுதலை’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சூரியிடம் நேற்று ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து சூரி கூறியதாவது, “இந்த விஷயம் எனக்கு காலையில் தான் தெரியவந்தது. எல்லாரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் திரையரங்கமே வந்தது. திரையரங்கத்திற்கு நீ, நான் என்ற பாகுபாடு கிடையாது. இந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று கூறினார்.
மேலும், “தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் நடித்தே எனக்கு பெருமை. இந்த படத்தில் யார் தேசிய விருது பெற்றாலும் அது நான் பெற்றதற்கு சமம் என்று கூறினார்.