இலங்கையில் இளைஞனும் யுவதியும் பேருந்து நிலையத்தில் சந்தித்து இரண்டு மணி நேரத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக பதிவாளர் ஒருவரிடம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குருநாகல் பேருந்து நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளை பிரதேசத்தின் வர்த்தக பகுதியில் பணிபுரியும் இந்த யுவதி, தங்குமிடத்திற்கு வருவதற்காக குருநாகல் பேருந்து நிலையத்தில் இருந்த போது, இளைஞன் ஒருவரை சந்தித்துள்ளார்.
பின்னர் இருவரும் கட்டுநாயக்க செல்லும் பேருந்தில் ஏறி உரையாடிக் கொண்டிருந்த போது, கொடதெனியவைக் கடக்கும் போது “திருமணம் செய்து கொள்வோம்” என இளைஞன் யோசனை முன்வைத்துள்ளார்.
இந்த யோசனையுடன் இருவரும் திவுலப்பிட்டிய நகரில் இறங்கி முச்சக்கர வண்டியில் திருமண பதிவாளர் அலுவலகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதிவாளரை சந்தித்த இளைஞன், திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த முச்சக்கர வண்டி சாரதியிடம் பதிவாளர் தம்பதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியதால் அழைத்து வந்ததாக அங்கு அவர் கூறினார்.
பின்னர், பதிவாளர் பெண்ணிடம் தகவல் வினவிய போது அவர் மாத்தளையை சேர்ந்தவர் எனவும் இளைஞன் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
திடீர் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து பதிவாளர் இளம்பெண்ணிடம் உண்மைகளை விளக்கியதாகவும், இருவரது வசிப்பிடங்களும் வெவ்வேறானதால் திருமணத்தை பதிவு செய்ய முடியாத நிலை குறித்தும் விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.