இசையின் இப்போதைய உச்சமான வடிவம் சொல்லிசை. வார்த்தைகளை இசையுடன் இணைத்து வேகமுடன் ஆனால் அதிக அர்த்தத்துடன் கருத்து ஆழத்துடன் வெளிப்படுத்தும் ஒரு முறை. உலகம் முழுதும் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இசை முறை இது.
ஈழத்தில் பிறந்து தற்போது டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இளம் சொல்லிசை கலைஞன் டேரியல் தன்னுடைய புதிய படைப்புகளை இப்போது சர்வதேச முன்ணணி ஊடகங்களில் வெளியிட்டு புதிய வீச்சு ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறார். மிகவும் சிறந்த சர்வதேச இசை நிறுவனமான நொய்ஜி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச முன்னணி ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இவருடைய தற்போதைய புதிய பாடலான மருந்து என்பது நவீனமுறையில் படமாக்கப்பட்டு இதுவரைகால எடிட்டிங் முறையில் காணப்படாத அழகிய முறையில் சேர்க்கப்பட்டு இப்போது யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் மீதான எங்களின் கரிசனையை, மனித உணர்வுகள் மீதான எமது தேடலை புதிய சொற்களில் இசையாக்கும் இந்த இளைஞனையும் அவரது முயற்சியையும் இனிவரும் காலங்களில் அனைத்து ஊடகங்களும் வெளியிடும் என்று நம்புவோமாக..