Loading...
சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான நிவாரணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
யுத்தம் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பொருளாதாரம் தொடர்பான செயற்பாடு சுமார் 30% குறைந்து, உக்ரைன் வறுமையை நோக்கி நகர்வதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
Loading...
இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்ட தொகையில் இருந்து 2.7 பில்லியன் டொலர்கள் உடனடியாக வழங்கப்பட உள்ள அதேவேளை மீதமுள்ள பணம் 4 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்.
அங்கு யுத்தம் தொடர்ந்தால், சுமார் 115 பில்லியன் என்கின்ற நிதித் தேவைகள் சுமார் 140 பில்லியன்களாக அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
Loading...