Loading...
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.
மெட்ரோ பணி முடிந்ததும் அதே இடத்தில் மீண்டும் காந்தி சிலை நிறுவப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading...
சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் காந்தி சிலை அருகே நடைபெறுவதால் சிலை சேதம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அதேநேரத்தில், கலங்கரை விளக்கம், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதை கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
Loading...