Loading...
உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீதத்தை OPEC ப்ளஸ் வழங்குகிற நிலையில் சவுதி அரேபியாவும் ஈராக்கும் கச்சா எண்ணெயை விநியோகத்தை குறைப்பதாக அறிவித்துள்ளன.
Loading...
கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைப்பதன் நோக்கம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலையை 80 டொலர்களுக்கு மேல் வைத்திருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இன்று (03) பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.59 டொலர்களாகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.12 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
Loading...