Loading...
வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆறு மாத கால மீளாய்வு தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் தம்முடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் நிதியமைச்சின் செயலாளரும் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Loading...