நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட ஆயிரம் லீற்றர் நீரை வீட்டுக்கு கொண்டுவந்து வழங்குவதற்காக 48 ரூபா செலவாகின்றது.
ஆனால், 12 ரூபாவுக்கே நாம் நீரை வழங்குகின்றோம். அதாவது நான்கில் ஒரு பங்கு மட்டுமே அறிவிடுடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இதனை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திறைசேரியிலிருந்து எமக்கு பணம் கிடைப்பதில்லை. அதனால், கடன்களைப் பெறுவதனூடாக எமது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், சிறிய அளவில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எனினும், சமுர்த்தி பயனாளிகளுக்கு நீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.