நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்படும் ஊடக சந்திப்புக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அதற்கு எதிரான ஊடக சந்திப்புக்களை நடாத்த கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
நிதி அமைச்சரினால் ஊடக சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதற்கு பதிலளிக்கும் எதிர் ஊடக சந்திப்புக்கள் எதிர்வரும் நாட்களில் கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் நாட்டையும், நாடாளுமன்றையும், நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்தும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கி பல ஊடக சந்திப்புக்களை நடத்தி வருகின்றார் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு தனியான ஊடக சந்திப்புக்களை நடத்த உள்ளதாக நாடாளுன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிதி முகாமைத்துவம் மற்றும் மோசமான பாதிப்புக்கள் தொடர்பான அனைத்து பிழைகளையும் கடந்த மஹிந்த ராபஜக்ச அரசாங்கத்தின் மீது சுமத்தும் வகையில் ரவி கருணாநாயக்க ஊடக சந்திப்புக்களில் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே உண்மை நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் ரவி கருணாநாயக்கவின் ஊடக சந்திப்புக்களுக்கு பதிலளிக்கும் தனியான ஊடக சந்திப்புக்களை கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்யும் என பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.