உக்ரைன் இந்தப் போரில் வெற்றிபெறும்.அது மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்பதை நாங்கள் நம்புகிறோம் என ஜேர்மனியின் பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் பொருளாதாரத்துறை மற்றும் ஆற்றல் துறை அமைச்சரான Robert Habeck, இன்று உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு திடீரென சென்றுள்ளார்.
இந்த வருகையின் நோக்கம் என்னவென்று கீவ் தொடருந்து நிலையத்தில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு வலிமையான கூட்டாளி
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உக்ரைன் இந்தப் போரில் வெற்றிபெறும்.அது மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்பதை நாங்கள் நம்புகிறோம் என்பதை உக்ரைனுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞையாகத்தான் தான் கீவ் வந்துள்ளேன்.
எதிர்காலத்தில் பொருளாதார ரீதியில் ஒரு வலிமையான கூட்டாளியாக உக்ரைன் இருக்கும்.”என கூறியுள்ளார்.
ஜேர்மனியின் துணை சேன்ஸலராகவும் பதவி வகிக்கும் Habeck, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பின், முதன்முறையாக உக்ரைன் வருவது குறிப்பிடத்தக்கது.