விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
விவோ நிறுவனம் முற்றிலும் புதிய ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஃப்ளிப் போன் மூலம் பிரீமியம் பிரவில் அதிக பங்குகளை ஈர்க்க விவோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது.
இதில் ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்ப்ளே காணப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 4 மற்றும் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் போன்ற மாடல்கள் ஃப்ளிப் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், உருவாகி வரும் விவோ X ஃப்ளிப் மாடலின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
2 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேரமா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
4400 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
Photo Courtesy: PLAYFULDROID