ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ANC, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை இந்த இயர்போனின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் பட்ஸ் 2 பெயரில் புதிய நார்ட் சீரிஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நார்ட் பட்ஸ் 2 மாடலில் 25db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.3, ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர், டால்பி அட்மோஸ், 94ms அல்ட்ரா லோ லேடன்சி மற்றும் 12.4 டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த இயர்போன்களில் டச் கண்ட்ரோல், IP55 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடை அளவில் உள்ளன. இதனால் இவற்றை காதுகளில் அணிவது சவுகரிய அனுபவத்தை வழங்கும். இயர்பட்ஸ் உடன் மூன்று வித அளவுகளில் சிலிகான் இயர்பிளக் வழங்கப்படுகின்றன.
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 அம்சங்கள்:
12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர், பேஸ்வேவ் என்ஹான்ஸ்மெண்ட் அல்காரிதம்
ப்ளூடூத் 5.3, AAC கோடெக், டால்பி அட்மோஸ், ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர்
டூயல் கோர் பிராசஸர், 25db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரண்ட் மோட்
டூயல் மைக்ரோபோன், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன்
மாஸ்டர் ஈக்வலைசர்
டச் கண்ட்ரோல்
94ms லோ லேடன்சி, ப்ரோ கேமிங்
ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55)
41 எம்ஏஹெச் பேட்டரி
480 எம்ஏஹெச் சார்ஜிங் கேஸ்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 மாடல் லைட்னிங் வைட் மற்றும் தண்டர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ், மிந்த்ரா போன்ற வலைதளங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதவிர ஒன்பிளஸ் எக்ஸ்பீரின்ஸ் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களிலும் நடைபெற இருக்கிறது.