நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, N என்பது நயன்தாராவை குறிப்பதாகவும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்தனர். அங்கு ரசிகர்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களின் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.