Loading...
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
Loading...
இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோயிலில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா வழிபட்டனர் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading...