- நடிகை காயத்ரி ரகுராம் சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து விலகினார்.
- இவர் மீது தற்போது சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின்னர் பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராம், நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.
இதனிடையே காயத்ரி ரகுராம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் இவர் பாஜக கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக சென்னை சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் வாயிலாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளத்தில் காயத்திரி ரகுராம் அவதூறான கருத்துகளையும் தவறான செய்திகளையும் பரப்பி வருகிறார். இதனால் காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜகவின் மாநில வழக்கறிஞர் பிரிவின் துணைத் தலைவரான ஜி.எஸ்.மணி புகாரளித்துள்ளார்.