தென் மாவட்டங்களில் மட்டன் உப்புகண்டம் மிகவும் பிரபலம்.
பழைய சோறு, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி – 1 கிலோ
பூண்டு – 20 பல்,
காய்ந்த மிளகாய் – 15
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். உப்பு சிறிதளவு தான் போட வேண்டும். ஏனெனில் மட்டன் காயும் போது சுருங்கும். அதனால் உப்பு அதிகரித்து விடக்கூடாது.
இந்த விழுதினை நறுக்கி வைத்த மட்டனில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும்.
இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் வற்றும் வரை 1 வாரம் காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.