திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (07.04.2023) பதிவாகியுள்ளது.
பாலம் போட்டாறு காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக ஐந்து பேர் சென்றபோது அதில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் குறித்து விசாரணை
துப்பாக்கிச் சூட்டில், தம்பலகாமம் -பொற்கேணி பகுதியைச் சேர்ந்த யூ. எல். எம்.பரீட் (வயது 43) என்பவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த நபரின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 1990 நோயாளர் காவுவண்டி மூலம் அழைத்து வரப்பட்டு பின் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.