தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க இந்திய அரசாங்கம் முடிவு செய்திருந்த நிலையில் நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநில அரசின் கருத்துக்களை கேட்காமல் எடுத்த இந்த முடிவை அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் கோரிக்கை விடுத்த அதேவேளை விவசாயிகளும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.