சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ.12.3 கோடியே வசூல் செய்தது.
ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 .3 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதையடுத்து ‘பத்து தல’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ சிங்கம் தான்’ பாடலின் வீடியோ இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. விவேக்கின் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.