புஷ்பா -தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘புஷ்பா’. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘புஷ்பா -தி ரூல்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ யூ டியூபில் 64 மில்லியன் பார்வையாளர்களையும் 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.