மருத்துவர்களிடம் செல்லும் போது அவர்கள் நோயாளிகள் முகத்தை உற்று நோக்குவார்கள். அதன் மூலம் அடிப்படை நோய்களை மருத்துவர்களால் கணிக்க முடியும்.
அதே போல முகத்தில் ஏற்ப்படும் சில மாறுதல்கள் மூலம் நமக்கு இருக்கும் உடல் பிரச்சனையை நாமே கணிக்கலாம்
காய்ந்த தோல் மற்றும் உதடு
முகத்தின் தோல் அல்லது உதடுகள் திடீரென அடிக்கடி காய்ந்த நிலையில் மாறினால், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.
அதே போல தைராய்டு சுரப்பியில் கூட மாற்றம் இருக்கலாம். அதன் காரணமாக உடல் சோர்வு, ஜலதோஷம், உடல் எடை கூடுதல் பிரச்சனையும் வரலாம்
கண் இமைகள்
கண் இமைகள் மீது மஞ்சளாக இருந்தால் அவர்களுக்கு இதயம் சம்மந்தமான நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கூட இது தெரிய வந்துள்ளது.
முகம் சமச்சீரின்மை
முகத்தின் ஒரு பகுதி ஒரு வித உணர்ச்சியில்லாமல் சீரற்று இருந்தால் அது பக்கவாதம் வருவதற்கான அறிகுறி ஆகும்.
முகத்தின் நிறம்
முதத்தின் நிறத்தில் திடீரென மாறுதல் தெரிந்தால், அது இரத்த சேகையின் அறிகுறி ஆகும். மஞ்சள் நிறமாக முகம் மாறினால் கல்லீரல் பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.
முகம் தடித்தல்
முகத்தில் அடிக்கடி வீக்கம் போன்ற அழற்சி ஏற்ப்பட்டால் வயிற்று செரிமானத்தில் பிரச்சனை உள்ளது என அர்த்தமாகும்.