ஃபாஸ்டிராக் நிறுவனத்தின் புதிய லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் ஏடிஎஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் ஹார்ட் ரேட் டிராகிங், ஸ்லீப் டிராகிங், ஸ்டிரெஸ் டிராகிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஃபாஸ்டிராக் நிறுவனத்தின் புதிய லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபாஸ்டிராக் ரெவோல்ட் FS1 மாடலை தொடர்ந்து புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய லிமிட்லெஸ் FS1 மாடலில் 1.95 இன்ச் ஹாரிசான் கர்வ் டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.3, அடுத்த தலைமுறை ஏடிஎஸ் சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு உடல்நல டிராகிங் அம்சங்களான ஸ்டிரெஸ் டிராகிங், ஸ்லீப் டிராகிங் மற்றும் 24×7 ஹார்ட் ரேட் டிராகிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ் ஆப்ஷன்கள், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 அம்சங்கள்:
1.95 இன்ச் ஹாரிசான் கர்வ் டிஸ்ப்ளே, 240×296 பிக்சல் ரெசல்யூஷன்
அடுத்த தலைமுறை ஏடிஎஸ் சிப்செட்
ப்ளூடூத் 5.3
பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்
சிங்கில் சின்க் ப்ளூடூத் காலிங்
150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
பில்ட்-இன் அலெக்சா சப்போர்ட்
ஹெல்த் சூட்
ஃபாஸ்டிராக் ரிப்லெக்ஸ் வொர்ல்டு ஆப்
300 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி லைஃப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 மாடலின் அறிமுக விலை ரூ. 1995 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.