சுமார் 27 மாடி உயரம் கொண்ட கட்டிடத்தில் தாவி தாவி குதித்த சிறுவர்கள் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயரமான கட்டிடத்தில் தாவி தாவி குதித்த சிறுவர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சுமார் 27 மாடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், இரு சிறுவர்கள் இடைவெளிக்கு இடையில் இன்னொரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவி, தாவி குதித்தனர். எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாமல் இவர்கள் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டதால், இதைப் பார்த்த யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து தயவு செய்து இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட்களை வீட்டில் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.