Loading...
இந்திய அணியின் மூன்றுவித போட்டிகளிலும் தலைவனாக இருந்து வருகிறார் விராட் கோஹ்லி. இவர் தலைமையிலான இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது.
தன்னுடைய ஆட்டத்தில் மட்டுமின்றி விளம்பரங்கள் வாயிலாகவும் கோஹ்லி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அண்மையில் பிரபல விளம்பர நிறுவனம் ஒன்று கோஹ்லியை 8 ஆண்டுகளுக்கு 110 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
ஒரு இந்திய வீரர் இவ்வளவு அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
Loading...
இந்நிலையில் உலகின் நம்பர் 1 தடகள வீரர் உசைன் போல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோஹ்லி இதற்கு சரியான தேர்வு என புகழ்ந்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள விராட் ஒருநாள் உங்களைவிட வேகமாக ஓடுவேன். நன்றி ஜாம்பவான் என குறிப்பிட்டுள்ளார்.
Loading...