இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, மீண்டும் ஜார்க்கண்ட அணித்தலைவராக களமிறங்கி கலக்க உள்ளார்.
இந்தியாவின் உள்ளுர் மாநிலங்களிடையே நடைபெறும் விஜய் ஹசாரே கிண்ண தொடருக்கான 18 பேர் கொண்ட ஜார்க்கண்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜார்க்கண்ட அணித்தலைவராக டோனி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணி பதவியிலிருந்து விலகிய டோனி, சமீபத்தில் ஐபிஎல் தொடரில் புனே அணித்தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. இந்நிலையில் தற்போது, டோனி தனது சொந்த மாநில அணியின் தலைவராக மீண்டும் களமிறங்கி விளையாடவுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
விஜய் ஹசாரே தொடரில் ஜார்க்கண்ட் அணி சத்திஸ்கர், ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, சவுராஷ்டிரா மற்றும் சேவை அணிகளுடன் டி குரூப்பில் இடம்பெற்றுள்ளது.
டோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி தனது முதல் போட்டியில் கர்நாடகாவுடன் மோதுகிறது. இப்போட்டி எதிர்வரும் 25ம் திகதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.