Loading...
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் கப்ஹா, பிட்டா மற்றும் வடா ஆகிய மூன்று தோஷங்களும் சமநிலைப்படுத்தப்படுகிறது என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.
Loading...
அறிவியில் பார்வையின் படி, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு உடல்நல நன்மைகளும் உள்ளது என்று கூறுகின்றனர்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் குணத்தை செம்பு பாத்திரம் கொண்டுள்ளது. மேலும் இது நமக்கு வயிற்றுபோக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
- செம்பு என்ற அரியக் கனிமம், நமது உடம்பில் தைராய்டு சுரப்பியை சீராக செயல்பட வைக்கிறது. எனவே செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால், தைராய்டு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- கீல்வாத வலி மற்றும் அழற்சி நீக்கும் தன்மைகள் செம்பு பாத்திரத்தில் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. எனவே செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால், கீல்வாத மூட்டு வலிகள் குறைகிறது.
- நமது உடம்பில் ஏதேனும் காயங்கள் மற்றும் புண்களை வேகமாக குணப்படுத்தி, அந்த இடத்தில் புதிய அணுக்களை உருவாக்கி, அதிலுள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நீக்கி தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
- செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால், சீரான செரிமானத்தை ஏற்படுத்தி, வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கிறது. மேலும் இது மூளையின் வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
- நமது உடலின் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, ரத்தோட்டத்தை சீராக்கி, புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடையாமல் தடுத்து, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
- கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை குடித்து வந்தால், அது தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு தொற்றுக்கள் தாக்காமல் இருக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
Loading...