நடிகர் சல்மான் கான் தற்போது கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் நிகழ்ச்சியில் சல்மான் கான் மேடையிலேயே சட்டையை கழற்றினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வீரம்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் ‘கிஸி கி பாய், கிஸி கி ஜான்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் , ஹிமேஷ் ரேஷ்மியா , தேவி ஸ்ரீ பிரசாத் , பாயல் தேவ் , அமல் மல்லிக் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சல்மான் கான் சட்டையை கழற்றி அவருடைய சிக்ஸ் பேக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் சல்மான் கான் காட்டும் சிக்ஸ் பேக் எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என விமர்சனம் வந்த நிலையில், சட்டையை கழற்றி “இதை பார்த்தால் விஎஃப்எக்ஸ்ல் வந்தது போல தெரிகிறதா?” என கேள்வி எழுப்பினார்.