பால்மா பொதிகளின் விலை மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதமளவில் பால்மா பொதிகளின் விலை குறைக்கப்படலாம் என அந்த சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பால்மா விலையில் திருத்தம்
இதன்படி,இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதமளவில் பால்மாக்களின் விலையில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.