அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திருவின் குரல்’ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்காக அருள்நிதி பிரத்யேகமாக மாலை மலருக்கு பேட்டியளித்தார்.
இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘திருவின் குரல்’ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திருவின் குரல் படத்திற்காக நடிகர் அருள்நிதி மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பாரதிராஜா அவர்களுக்கு உங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்றும் நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்த நபர் என்று தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அருள்நிதி அளித்த பதில், பாரதிராஜா சார் என்கிட்ட சொன்னது, நீ நல்ல நடிகரையும் மீறி நல்ல மனிதர் அப்படினு சொன்னாரு. உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி வார்த்தை வருவது பெரிய விஷயம் சார். இந்த மாதிரி பெயர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனக்கு பெருமையா இருக்கு அதேசமயம் அதை தக்க வச்சிக்கனும்னு நான் நினைக்கிறேன். கூடுதல் பொறுப்பு வந்திருக்கு அதை காப்பாத்துவேன் சார் அப்படினு அவரிடம் கூறினேன் என்றார்.