இந்த போட்டி டோனி சி.எஸ்.கே.அணிக்கு கேப்டனாக பணியாற்றும் 200-வது ஆட்டமாகும்.
அவர் ஐ.பி.எல்லில் 213 போட்டிக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் வெற்றிகரமான கேப்டன் டோனி. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை (2010, 2011, 2018, 2021) சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 5 தடவை (2008, 2012, 2013, 2015, 2019) 2-வது இடத்தை பிடித்தது.
டோனி ஐ.பி.எல். போட்டியில் 237 ஆட்டங்களில் விளையாடி 5004 ரன் எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட போது அவர் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 2016-ம் ஆண்டு சீசனில் டோனி புனே அணிக்கு கேப்டனாக இருந்தார்.
அவர் ஐ.பி.எல்லில் 213 போட்டிக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார். இதில் 125 ஆட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. 87 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானததில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி டோனி சி.எஸ்.கே.அணிக்கு கேப்டனாக பணியாற்றும் 200-வது ஆட்டமாகும்.
டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 199 போட்டியில் விளையாடி 120-ல் வெற்றி பெற்றது. 78 ஆட்டத்தில் தோற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை.
இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்காகதான் அதிகபட்சமாக 18 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிராக 17-ல் வெற்றி கிடைத்தது. டெல்லி கேப்பிடல்சுக்கு எதிராக 16 போட்டியிலும், ராஜஸ்தான், பஞ்சாப்புக்கு எதிராக தலா 15 போட்டியிலும் வெற்றி பெற்றார்.