ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூர் அருகே உள்ள சாமுண்டி மலையில் வைத்தே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாமுண்டி மலையிலிருந்து குறித்த பெண் இறங்கிக்கொண்டிருந்த போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் அவரிடமிருந்த போன் மற்றும் 2,500 ரூபாய் பணத்தை பறித்துள்ளார்.
இதனையடுத்து, பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மர்ம நபரை எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
பின்னர், அவர் சம்பவம் குறித்து அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.