Loading...
நாட்டை வழிநடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ மிகவும் பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ஷ சிறந்த தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்திய தலைவர் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் யுத்த காலத்தில் சர்வதேச சமூகத்தை சிறப்பாக கையாண்டு சர்வதேச ஆதாரவை பெற்றுக்கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து, உலகில் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையை மாற்றுவதற்கு பசில் ராஜபக்ஷ சிறந்தவர் என கூறியுள்ளார்.
Loading...