சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெமினி’.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெமினி’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கிரண் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், கலாபவன் மணி, வினு சக்ரவர்த்தி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இன்று வரை முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. அதிலும், ‘ஓ போடு’ பாடல் இடம்பெறாத இசை நிகழ்ச்சிகளே கிடையாது. அந்த அளவிற்கு கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ஜெமினி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளாகியுள்ளதை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.