- ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் பட்டியலில் 2-வது இடத்தில் டோனி உள்ளார்.
- ஐபிஎல் தொடரில் அதிக முறை கடைசி பந்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி (7 முறை) 2-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி இந்த தொடரோட முதல் வெற்றிய பதிவு செய்தது.
ஒரு போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கடைசி 25 போட்டிகளில் முதல் அரைசதம் விளாசியுள்ளார். இந்த தொடரோட முதல் அரைசதம்.
ஐபிஎல் தொடரில் இது அவருக்கு 41-வது அரைசதம் ஆகும். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 6-வது அரைசதம். அருண் ஜெட்லி மைதானத்தில் 3-வது ஐபில் அரை சதம்.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் என்ற சாதனையை ரோகித் சர்மா (19 முறை) படைத்துள்ளார். 2-வது இடத்தில் டோனி (17 முறை) உள்ளார்.
இந்த போட்டியில் டெல்லி அணியை ஆல் அவுட் செய்ததன் மூலமாக 31 முறை எதிரணியை ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக முறை கடைசி பந்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி (7 முறை) 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சென்னை அணி (8 முறை) உள்ளது.